டெல்லி: சிஆர்பிஎப் பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள் - பரபரப்பு
|தலைநகர் டெல்லியில் சிஆர்பிஎப் பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில் சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) பள்ளி உள்ளது. இந்நிலையில், சிஆர்பிஎப் பள்ளி அருகே இன்று காலை பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. காலை 7.50 மணியளவில் சிஆர்பிஎப் பள்ளி நுழைவு வாயில் அருகே மர்ம பொருள் வெடித்தது. இந்த சம்பவத்தில் அருகே உள்ள கடைகளின் விளம்பர பதாகைகள் சேதமடைந்தன. கார்களின் கண்ணாடிகள் உடைந்தன.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார், பாதுகாப்புப்படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குண்டுவெடிப்பு சம்பவமா? பயங்கரவாத தாக்குதலா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்வா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது .