< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
|4 Jan 2025 3:40 AM IST
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரு வேன் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த வேன் மாநில நெடுஞ்சாலையில் இருந்து கோகுண்டா-பின்ட்வாரா தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு கனரக லாரி வேன் மீது மோதியது.
இதில் வேனில் இருந்த 13 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பெண்கள் உள்பட 5 பேர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.