< Back
தேசிய செய்திகள்
இந்திரா காந்தி நினைவு நாள்: ராகுல் மரியாதை
தேசிய செய்திகள்

இந்திரா காந்தி நினைவு நாள்: ராகுல் மரியாதை

தினத்தந்தி
|
31 Oct 2024 10:03 AM IST

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 40வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்துக்கு இன்று காலை சென்ற ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்