< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில்  மது பிரியர்களுக்காக செல்போன் செயலி அறிமுகம்
தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் மது பிரியர்களுக்காக செல்போன் செயலி அறிமுகம்

தினத்தந்தி
|
16 Nov 2024 1:46 AM IST

பள்ளிகளை மூடிவிட்டு, மதுக்கடைகளை ஆளும் மாநில பாஜக அரசு ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மாநில கலால் துறை, மது பிரியர்களுக்காக 'மன்பசந்த்' என்ற புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், மதுக்கடைகள், அங்குள்ள பல்வேறு கம்பெனிகளின் மது பாட்டில்கள் கையிருப்பு விவரம், விலை விவரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், தாங்கள் விரும்பும் நிறுவனத்தின் மதுபாட்டில்களை வாங்கி வைக்குமாறு செயலி மூலமாகவே கலால் துறையை வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளலாம். மதுக்கடைகள் பற்றி புகாரும் அளிக்கலாம். இதற்கிைடயே, இந்த செயலி அறிமுகத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பூபேஷ் பாகல் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில், ''சத்தீஷ்காரை வளமடைய செய்வோம்' என்று முழக்கமிட்ட பா.ஜனதா, தற்போது பள்ளிகளை மூடிவிட்டு, மதுக்கடைகளை ஊக்குவிக்கிறது. பொதுமக்கள் சிறந்த நிறுவனத்தின் மதுபானத்தை குடிக்க ஏற்பாடு செய்துள்ளது'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்