< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கியதில் பெண் பலி
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கியதில் பெண் பலி

தினத்தந்தி
|
28 Feb 2025 4:09 PM IST

சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்து கொண்டிருந்த 35 வயது பெண்ணை சிறுத்தை கடித்து கொன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி துஷ்யந்த் குமார் கூறுகையில், சவுதேரி கிராமத்தை சேர்ந்த சுமன் (35) என்ற பெண் நேற்று மாலை காட்டிற்கு சென்று திரும்பி வரவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேற்று இரவு ஒரு வயலில் அவரது பகுதியளவு உண்ணப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய அதிகாரிகள் அதை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடி வருகின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்