< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு
|3 Dec 2024 1:55 PM IST
மலைப்பாதையில் பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டுமென திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமலை,
திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் பயணிக்க பயன்படுத்தப்படும் இரண்டாவது மலை பாதையில் ஐந்தாவது கிலோமீட்டர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலைப்பகுதியின் உயரமான இடங்களில் இருந்து கற்கள் மண் ஆகியவை சரிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு சென்ற தேவஸ்தான பொறியியல் துறையினர், சரிந்து விழுந்த கற்கள், மண் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர் மழை காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக திருப்பதி மலை பாதையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மலைப்பாதையில் பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.