< Back
தேசிய செய்திகள்
லலித் மோடிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

லலித் மோடிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
22 Dec 2024 7:38 AM IST

ஐபிஎல் தலைவராக இருந்த எனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லலித் மோடி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித் மோடி ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் சிக்கி வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் (பெமா) 2018-ம் ஆண்டு அமலாக்கத்துறை தனக்கு விதித்த ரூ.10.65 கோடி அபராதத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் செலுத்த உத்தரவிட வேண்டும். அமலாக்கத்துறை நடவடிக்கையின் போது இந்திய கிரிக்கெட் வாரிய துணை தலைவராகவும், ஐ.பி.எல். தலைவராகவும் இருந்ததால் தனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் மகேஷ் சோனக், ஜித்தேந்திர ஜெயின் விசாரித்தனர். அவர்கள் லலித் மோடியின் மனு அற்பத்தமானது, முற்றிலும் தவறானது எனக்கூறி தள்ளுபடி செய்தனர். மேலும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதை டாடா புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்