< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் திரையிடப்படும் லாபடா லேடீஸ் திரைப்படம்
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் திரையிடப்படும் 'லாபடா லேடீஸ்' திரைப்படம்

தினத்தந்தி
|
9 Aug 2024 3:15 AM GMT

அமீர்கான் தயாரிப்பில் வெளியான 'லாபடா லேடீஸ்' திரைப்படம் இன்று சுப்ரீம் கோர்ட்டில் திரையிடப்படுகிறது.

புதுடெல்லி,

நடிகர் அமீர்கான் தயாரிப்பில் இயக்குனர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மார்ச் 1-ந்தேதி இந்தியில் வெளியான திரைப்படம் 'லாபடா லேடீஸ்'. இந்த படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலின சமத்துவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

லாபடா லேடீஸ் படத்தின் டிரைலர்:


இந்த நிலையில் 'லாபடா லேடீஸ்' திரைப்படம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு திரையிடப்படுகிறது. இந்த திரையிடலின்போது, நடிகர் அமீர் கான் மற்றும் இயக்குனர் கிரண் ராவ் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் 75-வது ஆண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த படத்தின் திரையிடலுக்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாக கட்டிட வளாகத்தின் சி பிளாக்கில் உள்ள அரங்கில் 'லாபடா லேடீஸ்' திரைப்படம் இன்று மாலை 4.15 மணி முதல் 6.20 மணி வரை திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரையிடலில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் செய்திகள்