< Back
தேசிய செய்திகள்
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்: தொழிலாளி கைது
தேசிய செய்திகள்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்: தொழிலாளி கைது

தினத்தந்தி
|
29 Oct 2024 12:56 AM IST

உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளியை போலிசார் கைதுசெய்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சபூஜின் (வயது 22). இவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மேற்கு வங்கத்திற்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என்று அங்கமாலி போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் விசாரணை நடத்துமாறு எர்ணாகுளம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி, சபூஜின் செல்போன் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஜாலங்கி பகுதியில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று, அவரை கைது செய்தனர். அதோடு அவருடன் இருந்த சிறுமியையும் மீட்டனர்.

மேலும் செய்திகள்