< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளா: அனுமதியின்றி கடலில் படப்பிடிப்பு - 2 படகுகளை பறிமுதல் செய்த கடலோர காவல் படை
|20 Nov 2024 5:33 PM IST
அனுமதியின்றி கடலில் படப்பிடிப்பு நடத்தியது தொடர்பாக 2 படகுகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சி அருகே செல்லானம் கடற்பகுதியில், உரிய அனுமதியின்றி தெலுங்கு திரைப்படத்திற்காக 2 படகுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர், 2 படகுகளையும் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் அனுமதி பெறாமல் கடலில் படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 2 படகுகளையும் கடலோர காவல் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக சம்பந்தப்பட்ட படக்குழுவினர், துறைமுக பகுதியில் மட்டும் படப்பிடிப்பு நடத்திக் கொள்வதற்கு அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் அந்த அனுமதியை மீறி கடலுக்குள் சென்று இவர்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.