< Back
தேசிய செய்திகள்
வயநாடு இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு
தேசிய செய்திகள்

வயநாடு இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

தினத்தந்தி
|
13 Nov 2024 8:29 AM IST

வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம்,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார்.

இதையடுத்து, வயநாட்டின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பின்னர், காலியான வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர்.

இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்காக 1,354 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்