< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளா: பெண் டாக்டர் மீது தாக்குதல் - வாலிபர் கைது
|4 Oct 2024 1:43 AM IST
வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த டாக்டரை வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலப்புழா,
ஆலப்புழா மாவட்டம் கலவூர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 32). இவர் ஆலப்புழா அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த மண்ணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சுனில் லால் (28) என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததோடு, அஞ்சுவை தாக்கியதாக தெரிகிறது.
இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன அவர் கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து வைத்தனர். சம்பவம் குறித்து மண்ணஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதோடு பெண் டாக்டரை தாக்கியதாக சுனில் லாலை கைது செய்தனர். பெண் டாக்டர் மீது வாலிபர் தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.