< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீர்: வீட்டில் தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்
|18 Dec 2024 10:11 AM IST
காஷ்மீரில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
கத்துவா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் சிவா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், வாடகை வீட்டில் வசித்து வந்தவர்களில் 10 பேர் வரை சிக்கி கொண்டனர்.
அவர்களில் 6 பேர் உயிரிழந்து விட்டனர். அந்த 6 பேரில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். தவிர, படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இதுபற்றிய முதல் கட்ட விசாரணையில், புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்து காணப்பட்டன. வீடு முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பலால் சூழப்பட்டு உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.