காஷ்மீர்: சாலை விபத்தில் 4 பேர் பலி; மத்திய மந்திரி இரங்கல்
|ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவத்திற்கு மத்திய மந்திரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பத்தர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 4 பேர் பலியானார்கள். ஓட்டுநர் உள்பட 2 பேர் காணாமல் போனார்கள்.
இந்த தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், பத்தர் பகுதியில் சன்யாஸ் என்ற இடத்தில் சாலை விபத்து ஏற்பட்டது என தெரிந்ததும், கிஷ்த்வார் மாவட்ட ஆணையாளர் ராஜேஷ் குமார் ஷாவானை தொடர்பு கொண்டு பேசினேன்.
அந்த வாகனத்தில் 5 பேர் பயணித்தனர். மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து இந்த விசயம் பற்றி அறிந்து வருகிறேன் என்று அதில் தெரிவித்து உள்ளார்.
காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் ராணுவ வாகனம் ஒன்று நேற்று விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்ததில், 4 வீரர்கள் பலியானார்கள். 2 வீரர்கள் காயமடைந்தனர்.