< Back
தேசிய செய்திகள்
கர்நாடகம்: மண்ணில் புதைந்து தொழிலாளி பலி
தேசிய செய்திகள்

கர்நாடகம்: மண்ணில் புதைந்து தொழிலாளி பலி

தினத்தந்தி
|
8 Jan 2025 4:50 PM IST

மங்களூரு அருகே ஹோய்கேபைல் பகுதியில் மண்ணில் புதைந்து தொழிலாளி பலியானார்.

மங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஹோய்கேபைல் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் குழிதோண்டும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அவர்களில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கமல் உசேன் என்ற தொழிலாளியும் ஒருவர் ஆவார்.

அவர் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிபாராத விதமாக திடீரென மேலே குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் மண்ணுக்குள் புதைந்த கமல் உசேன் மூச்சுத்திணறி உயிருக்கு போராடினார்.

அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமணைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்