< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - அதிர்ச்சி வீடியோ
|8 Nov 2024 4:58 PM IST
கர்நாடகாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா,
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்கராபேட்டை நகரில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் அந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் வெளிப்புறச் சுவர் சேதமடைந்தது. வீட்டில் இருந்த 3 பேரை தீயணைப்புத் துறையினர் வெளியேற்றினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.