< Back
தேசிய செய்திகள்
கர்நாடகா: டியூசன் வகுப்புக்கு வந்த மாணவியுடன் காதல் - ஆசிரியர் கைது
தேசிய செய்திகள்

கர்நாடகா: டியூசன் வகுப்புக்கு வந்த மாணவியுடன் காதல் - ஆசிரியர் கைது

தினத்தந்தி
|
9 Jan 2025 5:10 AM IST

மைனர் சிறுமியை கடத்தியதாக ஆசிரியர் அபிஷேக் கவுடா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகாவில் உள்ள மண்டியா மாவட்டம் ஜே.பி.நகர் காவல் நிலையத்தில், கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி, மைனர் சிறுமியை காணவில்லை என வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அபிஷேக் கவுடா என்ற ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அபிஷேக் கவுடா நடத்தி வந்த டியூசன் வகுப்புக்கு சம்பந்தப்பட்ட சிறுமி தினமும் சென்று வந்துள்ளார். தனது டியூசன் வகுப்புக்கு மாணவியாக வந்த மைனர் சிறுமியுடன் அபிஷேக் கவுடாவுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், 25 வயதான அபிஷேக் கவுடாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்த சூழலில், சிறுமியை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஆசிரியர் அபிஷேக் வீட்டை விட்டு சென்றுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், மண்டியா மாவட்டத்தில் உள்ள மாலவள்ளி பகுதியில் ஆசிரியர் அபிஷேக்கை கைது செய்து, சிறுமியை மீட்டனர். மேலும் அபிஷேக் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்