< Back
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு

தினத்தந்தி
|
21 March 2025 3:30 PM IST

கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் முதல் மந்திரி, மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோரின் சம்பளம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மசோதா இன்று அம்மாநில சட்டசபையில் நிறைவேறியுள்ளது.

கர்நாடக சட்டசபை சம்பளம், பென்சன் மற்றும் படிகள் திருத்த மசோதாப்படி, முதல் மந்திரியின் சம்பளம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாகவும், மந்திரிகளின் சம்பளம் ரூ.60ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும், எம்.எல்.ஏ.,க்கள் எம்.எல்.சி.,க்களின் சம்பளம் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும், பென்சன் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.95 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து படி ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாகவும், சொந்த தொகுதியில் பயணம் மேற்கொள்ள ரூ.60 ஆயிரமாகவும், மருத்துவ படி, டெலிபோன் கட்டணம், தபால் கட்டண படி ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1.10 லட்சமாகவும் சபாநாயகர், சட்ட மேலவை தலைவர் சம்பளம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.25 லட்சம் ஆகவும் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்