< Back
தேசிய செய்திகள்
கர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி

File image

தேசிய செய்திகள்

கர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி

தினத்தந்தி
|
23 Nov 2024 3:05 PM IST

கர்நாடகாவில் இடைத்தேர்தலில் பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகன் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

பெங்களூரு,

ஜார்கண்ட் மற்றும் மராட்டியம் ஆகிய 2 மாநில சட்டசபை தேர்தலுடன் உத்தரபிரதேசம், அசாம், பீகார், குஜராத், கர்நாடகம், வயநாடு, மத்திய பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சி.பி. யோகேஷ்வர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மத்திய மந்திரி குமாரசாமி மகனை தோற்கடித்தார்.

சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி துக்காராம் மனைவி இ.அன்னபூர்ணா பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை தோற்கடித்துள்ளார். அதேபோல, ஷிக்கான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.

மேலும் செய்திகள்