கர்நாடகாவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி
|கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூருவில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதனி நகரா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். வீட்டின் சுவர் இடிந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தக்சன கன்னட மாவட்டத்தில் நேற்று முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது.