< Back
தேசிய செய்திகள்
கமல்ஹாசனுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து
தேசிய செய்திகள்

கமல்ஹாசனுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து

தினத்தந்தி
|
7 Nov 2024 12:03 PM IST

கமல்ஹாசனுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

திருவனந்தபுரம்,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

என் இனிய நண்பர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் .சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தனது கலை மற்றும் பொது தலையீடுகள் மூலம் நம் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார் கமல் . கேரள மக்கள் மீதான அவரது அபிமானம் ஊக்கமளிக்கிறது. அவர் எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சியடைய வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்