கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்
|தமிழக அரசு மேல் முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் பாஜக, பாமக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து கடந்த ஜூன் மாதம் 68 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தெரிவித்து பாஜகவின் வக்கீல் மோகன்தாஸ் சார்பில் வக்கீல்கள் ஜி.எஸ்.மணி, ஆர்.சதீஷும், பா.ம.க.வின் வக்கீல் கே.பாலு சார்பில் வக்கீல் எஸ்.தனஞ்செயனும் கேவியட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.