< Back
தேசிய செய்திகள்
டெல்லி: மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக கைலாஷ் கெலாட் அறிவிப்பு
தேசிய செய்திகள்

டெல்லி: மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக கைலாஷ் கெலாட் அறிவிப்பு

தினத்தந்தி
|
17 Nov 2024 1:36 PM IST

டெல்லி போக்குவரத்து துறை மந்திரி பொறுப்பில் இருந்து கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்துள்ளார்

புதுடெலி,

டெல்லி மாநில மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார். டெல்லியில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கைலாஷ் கெலாட் திடீரென ராஜினாமா செய்துள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார். டெல்லியில் போக்குவரத்து துறை மந்திரியாக கைலாஷ் கெலாட் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது டெல்லியில் ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆம் ஆத்மியும் ஆட்சியை தக்க வைக்க திட்டமிட்டு வருகிறது. இத்தகைய சூழலில்தான், டெல்லி மந்திரி பதவியில் இருந்து விலகியதோடு, கட்சியில் இருந்தும் கெலாட் பதவி விலகியிருக்கிறார். கைலாஷ் கெலாட், பாஜகவில் இணையக் கூடும் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது.

மேலும் செய்திகள்