< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் பதவியேற்பு
தேசிய செய்திகள்

மணிப்பூர் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் பதவியேற்பு

தினத்தந்தி
|
22 Nov 2024 3:13 PM IST

மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் பதவியேற்றுக் கொண்டார்.

இம்பால்,

சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருப்பவர் டி.கிருஷ்ணகுமார். இவர், சிறிது காலம் ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். தற்போது இவரை மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் முடிவு செய்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரையும் செய்தது.

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், மணிப்பூர் ஐகோர்ட்டின் 8வது தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் இன்று பதவியேற்றுக் கொண்டார். ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு மணிப்பூர் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைந்து, காலியிடங்கள் 9 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்