< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு

தினத்தந்தி
|
5 Dec 2024 3:15 PM IST

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மன்மோகனின் பெயரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. பரிந்துரையின்பேரில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மன்மோகனை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நீதிபதி மன்மோகன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

நீதிபதி மன்மோகன் மார்ச் 2008ல் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார் மற்றும் அதன் தலைமை நீதிபதியாக கடந்த செப்டம்பர் 29 முதல் செயல்பட்டு வந்தார். இவர் நேற்று டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவியில் இருந்து விடைபெற்றார்.

மேலும் செய்திகள்