< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜார்கண்ட் தேர்தல்: ஹேமந்த் சோரன் மனைவி பின்னடைவு
|23 Nov 2024 11:51 AM IST
ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா 18,940 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
ராஞ்சி,
ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் 14ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 20ம் தேதியும் நடைபெற்றது. ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.
இந்த தேர்தலில் காண்டே தொகுதியில், முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளராக ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும், பாஜக வேட்பாளராக முனியா தேவியும் களமிறங்கினர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், கல்பனா சோரன் 18,940 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். கல்பனா சோரனை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் முனியா தேவி 21,959 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,019 ஆகும்.