ஜார்கண்ட் தேர்தல்: முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் முன்னிலை
|ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
ராஞ்சி,
ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் 14ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 20ம் தேதியும் நடைபெற்றது. ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின. ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளர்களாக களமிறங்கினர். இத்தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் பர்ஹெத் தொகுதியில், முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளராக அம்மாநில முதல்- மந்திரி ஹேமந்த் சோரனும், பாஜக வேட்பாளராக கமாலியேல் ஹெம்ப்ரோம் களமிறங்கினர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், ஹேமந்த் சோரன் 72,216 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் கமாலியேல் 45,358 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 26,858 ஆகும்.
காண்டே தொகுதியில் பின்னடைவை சந்தித்த ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, 16வது சுற்று முடிவுபடி 92,482 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல, தும்கா தொகுதியில் ஹேமந்த் சோரன் சகோதரர் பசந்த் சோரன் 91,793 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.