< Back
தேசிய செய்திகள்
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்; டி.ஜி.பி.யை நீக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்; டி.ஜி.பி.யை நீக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு

தினத்தந்தி
|
19 Oct 2024 6:36 PM IST

ஜார்கண்டில் கடந்த கால தேர்தல்களின்போது, டி.ஜி.பி.க்கு எதிராக புகார்கள் எழுந்து, அதன்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்த சம்பவம் நடந்துள்ளது.

ராஞ்சி,

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் ஆனது, நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜார்கண்ட் டி.ஜி.பி. (பொறுப்பு) அனுராக் குப்தாவை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்கும்படி மாநில அரசுக்கு, தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டு உள்ளது.

கடந்த காலத்தில் நடந்த தேர்தல்களின்போது, இவருக்கு எதிராக புகார்கள் எழுந்ததும், அதன்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்த சம்பவமும் நடந்துள்ளது. இதன் அடிப்படையில் அவரை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, டி.ஜி.பி. பொறுப்பு ஆனது, அந்த வகையில் மூத்த டி.ஜி.பி. அந்தஸ்திலான வேறொரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்