ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: மக்கள் முழு ஆர்வத்துடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
|ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மக்கள் முழு ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட தேர்தல் இன்றும் (நவம்பர் 13), 2ம் கட்ட தேர்தல் 20ம் (நவம்பர்) தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி 43 சட்டசபை தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,மக்கள் முழு ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் மக்கள் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.முதன்முறையாக வாக்களிக்கப் போகும் இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.