< Back
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
15 Aug 2024 1:55 PM IST

செயற்கைக்கோள் ஏவப்படுவதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி,

தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.17 மணிக்கு சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், புதிய செயற்கைக்கோள் ஏவப்படுவதை ஒட்டி இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்