< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விண்கலன்களை இணைக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு: இஸ்ரோ
|8 Jan 2025 9:46 PM IST
இரு விண்கலன்களை இணைக்கும் நாளைய நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பெங்களூரு,
இரட்டை விண்கலன்கள் கடந்த 30-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த விண்கலன்கள் பூமியில் இருந்து 475 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் இரு விண்கலன்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தொலைவு படிப்படியாக 20 கி.மீ. குறைக்கப்பட்டு அவை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வு வரும் நாளை (ஜன. 9) காலை 8 மணி முதல் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில், விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ கூறியுள்ளது.
விண்கலன்கள் 225 மீ இடைவெளியில் இருந்தபோது திட்டமிட்டபடி சுழற்றி மேற்கொள்ள முடியவில்லை. சில தொழில்நுட்ப இடையூறுகள் காரணமாக திட்டமிட்டபடி விண்கலன்கள் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.