< Back
தேசிய செய்திகள்
தெற்கில் இருந்து வந்த ஹேமா மாலினி பெண் இல்லையா? பிதூரி கேள்வி
தேசிய செய்திகள்

தெற்கில் இருந்து வந்த ஹேமா மாலினி பெண் இல்லையா? பிதூரி கேள்வி

தினத்தந்தி
|
5 Jan 2025 6:46 PM IST

பிரியங்கா காந்தி சர்ச்சை விவகாரத்தில், ஹேமா மாலினியும் கூட ஒரு பெண் தான் என பா.ஜ.க.வை சேர்ந்த பிதூரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கல்காஜி தொகுதிக்கான வேட்பாளராக, முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது. இந்நிலையில், பிதூரி அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, பீகாரில் லாலு பிரசாத், ஹேமா மாலினியின் மென்மையான கன்னங்களை போன்று சாலைகளை அமைப்பேன் என கூறினார். ஆனால், கூறியபடி அவரால் செய்ய முடியவில்லை.

அவர் பொய் கூறியுள்ளார். ஆனால், நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஓக்ளா மற்றும் சங்கம் விகார் பகுதியில் நாங்கள் சாலைகளை மேம்படுத்தியது போன்று, கல்காஜியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் மென்மையான கன்னங்களை போன்று அமைப்போம் என நாங்கள் உறுதியாக கூறுகிறோம் என்று பேசினார்.

அவருடைய இந்த பேச்சு சர்ச்சையானது. இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் சுப்ரியா ஸ்ரீநாத், அல்கா லம்பா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சுப்ரியா கூறும்போது, இது வெட்கக்கேடானது என கூறியதுடன், பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை பா.ஜ.க. ஊக்குவிக்கிறது.

பிரியங்கா காந்தியை பற்றி அவர் கூறியது, பெண்களை பற்றிய அவருடைய மனநிலையை காட்டுகிறது. இதுவே பா.ஜ.க.வின் உண்மையான முகம் என்று கடுமையாக சாடினார்.

பிரியங்கா காந்தியை பற்றி பா.ஜ.க.வை சேர்ந்த பிதூரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதுபற்றி பிதூரி நிருபர்களிடம் பேசும்போது, ஹேமா மாலினியும் கூட ஒரு பெண் தான். முதலில் யார் தவறு செய்தனரோ, அவர்கள் முதலில் மன்னிப்பு கோர வேண்டும். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் அவர்.

அவர் ஒரு பெண் இல்லை. ஆனால் தெரிந்த குடும்பத்தில் இருந்த வந்த ஒருவர், பெண் என்றால், எப்படி இது சாத்தியம்? காங்கிரஸ் முதலில் சரி செய்ய வேண்டும். இதன்பின்னர் நாங்களும் சரி செய்வோம்.

பா.ஜ.க. பொய்யான வாக்குறுதிகளை தராது. தெற்கில் இருந்து வந்தவர் ஹேமா மாலினி. இதனால் அவர் ஒரு பெண் இல்லையா? ஒவ்வொருவருக்கும் மதிப்பு கிடைக்க வேண்டும். காங்கிரஸ் இதனை தெளிவுப்படுத்த வேண்டும். அதன் மந்திரி சபையில் இருந்த லாலுவை மன்னிப்பு கேட்க வைத்திருக்க வேண்டும்.

அதனை அவர்கள் கேட்கவில்லை. ஏனெனில், அவர் எளிமையான ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர். இதுவே காங்கிரசின் போலியான நடிப்பு. 70 ஆண்டுகளில் நாட்டை நேரு குடும்பம் கெடுத்து உள்ளது. நாடு அவர்களை நிராகரித்து விட்டது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்