< Back
மாநில செய்திகள்
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுகிறதா..? தமிழ்நாடு அரசு விளக்கம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுகிறதா..? தமிழ்நாடு அரசு விளக்கம்

தினத்தந்தி
|
11 Aug 2024 5:21 AM GMT

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

சென்னை,

நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனையடுத்து ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வதந்தி:

அரசு ஊழியர் ஓய்வு வயது 60-லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது' என்ற தகவல் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஆலோசனையும் இல்லை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்