< Back
தேசிய செய்திகள்
எரிமலை வெடிப்பு: பாலி செல்லும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

எரிமலை வெடிப்பு: பாலி செல்லும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

தினத்தந்தி
|
13 Nov 2024 5:58 PM IST

எரிமலை வெடிப்பு காரணமாக பாலி செல்லும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்தோனேசியாவில் உள்ள தீவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று பாலி செல்லும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவில் அமைந்துள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி லக்கி எரிமலையில் இந்த மாத தொடக்கத்தில் வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த எரிமலையில் இருந்து அபாயகரமான சாம்பல் உமிழப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக பல்வேறு விமான நிறுவனங்கள் பாலிக்கான தங்கள் விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. அந்த வகையில் பெங்களூருவில் இருந்து பாலிக்கு தினமும் விமான சேவை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம், "பாலியில் சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக, வெளிவரும் சாம்பல் மேகங்கள் விமானப் பயணத்தை பாதிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.

அதேபோல டெல்லியில் இருந்து பாலிக்கு தினமும் விமான சேவை வழங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனமும் விமான சேவையை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்