தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு; குவைத் செல்கிறது இந்திய விமானப்படை விமானம்
|தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை கொண்டு வர இந்திய விமானப்படையின் விமானம் குவைத்திற்கு செல்கிறது.
துபாய்,
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தில் மாங்காப் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் தமிழர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் பலியான இந்தியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டது. மேலும் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை உடனடியாக தாயகம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.
இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை கொண்டு வர இந்திய விமானப்படையின் விமானம் குவைத்திற்கு செல்கிறது. ஒரே விமானத்தில் உயிரிழந்த இந்தியர்கள் அனைவரின் உடல்களையும் கொண்டு வரும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.