இந்திய கடற்படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
|ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி,
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை ஆற்றிய சிறந்த பங்கை அங்கீகரிப்பதற்காகவும். 'ஆபரேஷன் ட்ரைடென்ட்' போர் நடவடிக்கையின் சாதனைகளை நினைவுகூரவும். கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
கடற்படை தினத்தை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பு, மற்றும் செழிப்பை உறுதி செய்யும் இந்திய கடற்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;
இந்திய கடற்படை தினத்தில், ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் நமது கடற்பரப்பை காக்கும் வீரம் மிக்க வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் அர்ப்பணிப்பு நமது தேசத்தின் பாதுகாப்பு, மற்றும் செழுமையை உறுதி செய்கிறது. இந்தியாவின் வளமான கடல் வரலாற்றைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம். இவ்வறு அவர் கூறியுள்ளார்.