< Back
தேசிய செய்திகள்

Photo Credit: PTI
தேசிய செய்திகள்
குரங்கு அம்மை : விமான நிலையங்களில் உஷார் நிலை

20 Aug 2024 12:49 AM IST
உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் வேகமாக குரங்கு அம்மை பரவி வருகிறது. குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், சா்வதேச பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. இந்தியாவிலும் நோய் தடுப்பு தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிரதமரின் முதன்மை செயலாளர் ஆர்.கே.மிஸ்ரா சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க விமான நிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிக்கவும், அண்டை நாடுகளான வங்கதேசம்,பாகிஸ்தான் ஆகிய எல்லை பகுதிகளில் நோய் பரவலை தடுத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.