< Back
தேசிய செய்திகள்
இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு
தேசிய செய்திகள்

இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு

தினத்தந்தி
|
30 Nov 2024 5:31 PM IST

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் ராணுவம் அக்னி வாரியர் 2024 என்ற தொகுப்பின் கீழ் மகாராஷ்டிராவில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மும்பை,

மராட்டிய மாநிலம் தேவ்லாலியில், இந்தியா மற்றும் சிங்கப்பூர் ராணுவ படைகள் இணைந்து 'அக்னி வாரியர் 2024 ' என்ற பெயரில் 13-வது கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டன. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவ பயிற்சி, இன்று(30.11.2024) நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில் இரு நாட்டு ராணுவ படைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டு ராணுவ பயிற்சி மராட்டியத்தின் தேவ்லாலியில் உள்ள பீல்ட் பைரிங் ரேஞ்ச்ஸில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ராணுவ படையினரால் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை நடத்தப்பட்ட மூன்று நாள் பயிற்சியில், சிங்கப்பூர் ஆயுதப் படையின் 182 வீரர்களும், பீரங்கி படையைச் சேர்ந்த 114 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழுவும் பங்கேற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பீரங்கி பயிற்சியானது, இந்திய ராணுவம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, இயங்குதன்மை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றை மேம்படுத்தவும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும், திறன்களை மேம்படுத்த உதவும் என இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் கூட்டு ராணுவ பயிற்சியின் கடைசி நாளான இன்று நிறைவு பெற்றது.இந்நிகழ்ச்சியில், பீரங்கிப்படையின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அதோஷ் குமார், பீரங்கிப் பள்ளியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.சர்னா, சிங்கப்பூர் ஆயுதப் படையின் தலைமை பீரங்கி அதிகாரி கர்னல் ஓங் சியோ பெர்ங் ஆகியோர் கலந்துகொண்டனர். 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டு பயிற்சியில், இருநாட்டு ராணுவத்தினரும் ஆயுத கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மிக கடுமையாக எடுத்து கொண்டனா்.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் ராணுவ படைகளிடையே ஒத்துழைப்பு மற்றும் கூட்டு புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்