< Back
தேசிய செய்திகள்
இந்தியா-கத்தார் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
தேசிய செய்திகள்

இந்தியா-கத்தார் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

தினத்தந்தி
|
18 Feb 2025 3:19 PM IST

ஒப்பந்தம் தொடர்பான கோப்புகளை கத்தார் பிரதமரும், இந்திய வெளியுறவுத்துறை மந்திரியும் பரிமாறிக்கொண்டனர்.

புதுடெல்லி:

கத்தார் நாட்டின் அமீர் (தலைவர்) ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி வரவேற்றார். இன்று டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், கத்தார் அமீரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மற்றும் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் பேசினர்.

பின்னர் பிரதமர் மோடி மற்றும் கத்தார் அமீர் முன்னிலையில் இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தம் தொடர்பான கோப்புகளை கத்தார் பிரதமரும் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசிம் அல் தானி, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் பரிமாறிக்கொண்டனர்.

இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பது, வருமான வரிகள் தொடர்பான நிதி ஏய்ப்பைத் தடுப்பது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தொடர்பான கோப்புகளை கத்தார் பிரதமரும், இந்திய நிதி மந்திரியும் பரிமாறிக்கொண்டனர்.

மேலும் செய்திகள்