< Back
தேசிய செய்திகள்
லெபனானுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
தேசிய செய்திகள்

லெபனானுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா

தினத்தந்தி
|
19 Oct 2024 5:43 AM IST

முதற்கட்டமாக லெபனானுக்கு 11 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது.

புதுடெல்லி,

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. தரை மற்றும் வான்வழியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் உள்பட மொத்தம் 33 டன் நிவாரண பொருட்களை லெபனானுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாகவும், முதற்கட்டமாக 11 டன் நிவாரண பொருட்கள் இன்று (அதாவது நேற்று) அனுப்பப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்