இந்தியா- சீனா எல்லை பிரச்சினை: நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் விளக்கம்
|எல்லைப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப உடன்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜெய்சங்கர் கூறினார்.
புதுடெல்லி,
இந்தியா - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று விளக்கம் அளித்தார். ஜெய்சங்கர் கூறியதாவது:-
இந்திய - சீன உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லை பிரச்சினையை தீர்க்க பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளை நிர்வாகம் செய்வதில் பரஸ்பர ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள சிக்கல்களை தீர்க்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. என்றார்
சீனாவுடான பிரச்சினை
இந்தியா -சீனா எல்லை பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படவில்லை. பதிலாக, எல்.ஏ.சி., எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு, இரு நாட்டு ராணுவமும் அவரவர் பகுதியில் ரோந்து செல்கின்றன. கால்வான் பகுதியில் 2020ல் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டது.
இருநாட்டு ராணுவத்தினரும், நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் படைகளை குவித்தனர். இதற்கு தீர்வு காண நான்காண்டுகளாக, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது. அதன் முடிவாக, கடந்த அக்டோர்பர் மாதம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.