< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் கூட்டணி கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கூட்டணி கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
24 Nov 2024 6:12 PM IST

மராட்டியத்தில் கூட்டணி கட்சிகள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ்), என்.சி.பி (எஸ்.பி), காங்கிரஸ் ஆகிய மூன்ரு கட்சிகளும் சேர்த்தே 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்நிலையில், மராட்டியத்தில் கூட்டணி கட்சிகள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளரும் கர்நாடகா மந்திரியுமான பரமேஸ்வர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு, பல தொகுதிகளில், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் அணியின் முழுமையான ஒத்துழைப்பு தேவைப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. அதேபோல,உத்தவ் அணிக்கு காங்கிரஸ் தரப்பில் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியை சேர்ந்தவர்களும் அதே வகையில் செயல்பட்டனர். இப்படி முழு ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில், கூட்டணிக்குள் சில குறைகள் இருந்தன"இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்