< Back
தேசிய செய்திகள்
ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு?
தேசிய செய்திகள்

ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு?

தினத்தந்தி
|
9 Dec 2024 5:31 PM IST

ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

சூரிய சக்தி மின் திட்டத்துக்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதில் அவருக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்த பிரச்சினையை முன்வைத்து நாடாளுமன்றத்திலும் அவர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் குளிர்கால கூட்டத்தொடரின் நாட்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்