< Back
தேசிய செய்திகள்
இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது.. ராகுல்காந்தி, கெஜ்ரிவால் பங்கேற்பு
தேசிய செய்திகள்

'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது.. ராகுல்காந்தி, கெஜ்ரிவால் பங்கேற்பு

தினத்தந்தி
|
1 Jun 2024 4:16 PM IST

டெல்லியில் 'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

'இந்தியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் சிங் மான், சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்