< Back
தேசிய செய்திகள்
Heat wave to increase in North India IMD

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

வட இந்தியாவில் நாளை வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
2 Jun 2024 6:01 PM IST

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நாளை வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதே சமயம், வட இந்தியாவில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது.

வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வரும் 3-ந்தேதி(நாளை) வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி பஞ்சாப், அரியானா, டெல்லி, ஜம்மு, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் நாளை தீவிரமான வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்