< Back
மாநில செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும் - வைகோ
மாநில செய்திகள்

'ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும்' - வைகோ

தினத்தந்தி
|
15 Dec 2024 9:14 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும் என வைகோ விமர்சித்துள்ளார்.

சென்னை,

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 12-ந்தேதி ஒப்புதல் அளித்தது. நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது. அதே சமயம், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவில் நடக்கும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் 2 ஆண்டுகளில் கவிழ்ந்துபோனால், மீண்டும் எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவார்களா? அல்லது ஒரு சில மாநில அரசுகள் கவிழ்ந்தால் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்தும் சேர்த்து தேர்தலை நடத்துவார்களா?

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வந்தால், சோவியத் யூனியனில் கோர்பச்சேவ் காலத்தில் என்ன நடந்ததோ, அது நரேந்திர மோடி காலத்தில் இந்தியாவில் நடக்கும். இந்தியா துண்டு துண்டாக உடையும். இதை நான் நாடாளுமன்றத்திலேயே சொல்லி இருக்கிறேன்."

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

மேலும் செய்திகள்