< Back
தேசிய செய்திகள்
தேர்தலில் வெற்றி பெற்றால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன் - என்.சி.பி.(எஸ்.பி.) வேட்பாளர் வாக்குறுதி
தேசிய செய்திகள்

'தேர்தலில் வெற்றி பெற்றால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்' - என்.சி.பி.(எஸ்.பி.) வேட்பாளர் வாக்குறுதி

தினத்தந்தி
|
8 Nov 2024 7:57 AM IST

திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன் என என்.சி.பி.(எஸ்.பி.) வேட்பாளர் ராஜாசாகேப் தேஷ்முக் வாக்குறுதி அளித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும்(மகாயுதி), காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஒரு அணியாகவும்(மகாவிகாஸ் அகாடி) போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், அங்கு அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மராட்டிய மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிடும் என்.சி.பி.(எஸ்.பி.) வேட்பாளர் ராஜாசாகேப் தேஷ்முக் அளித்த தேர்தல் வாக்குறுதி தற்போது பேசுபொருளாகி உள்ளது.

மராத்வாடா பகுதியில் உள்ள சத்ரபதி சாம்பாஜிநகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், "நான் வெற்றி பெற்றால் எனது தொகுதியில் உள்ள திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன். மணப்பெண் தேடும் இளைஞர்களிடம் வேலை அல்லது தொழில் இருக்கிறதா? என்று கேள்வி கேட்கிறார்கள்.

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனஞ்செய் முண்டே, இந்த தொகுதிக்கு எந்த தொழில் நிறுவனங்களையும் கொண்டு வரவில்லை. அதனால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல், திருமணமும் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்