ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
|ஹேமந்த் சோரனின் உதவியாளர் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்டில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் உள்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தலில் ஹவாலா பணப் பரிவர்த்தனை நடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வருமான வரித்துறையினர் அவரது வீட்டுக்குள் நுழைந்து சோதனையை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து சோதனை என்பது நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 26 -ம் தேதி ஹேமந்த் சோரன் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், கொல்கத்தாவில் 35 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், சுமார் ரூ. 150 கோடி மதிப்புள்ள பினாமி சொத்து, முதலீடு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன