எனக்காக நான் வீடு கட்டிக்கொண்டது இல்லை: பிரதமர் மோடி
|டெல்லியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டங்கள் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் அசோக் விஹார் பகுதியில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்புகளை தகுதியான பயனாளிகளுக்கு சாவிகளை மோடி வழங்கினார்.
அதன்பின்னர் பேசிய அவர் கூறியதாவது, இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்றும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும். எனக்காக நான் மாளிகை கட்டியிருக்க முடியும், ஆனால் இதுவரை வீடு கட்டிக்கொண்டது இல்லை. மக்களுக்கு வீடு கொடுப்பதே எனது கனவு, ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டியுள்ளேன். வளர்ச்சியை பற்றி பேசி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி மக்கள ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து தங்களை விடுவிக்க முடிவு செய்துவிட்டனர். கல்விக்காக அளிக்கும் சமக்ர சிக்ஷா நிதி பாதியை கூட டெல்லி அரசு செலவழிக்கவில்லை. டெல்லி அரசு 10 ஆண்டுகளில் கல்விக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.