வெடிகுண்டு மிரட்டல் புரளி: சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
|வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி,
இந்தியாவில் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படு வருகிறது. உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் வெடிகுண்டு மிரட்டலால் அவசர அவரமாக தரையிறக்கப்படுகின்றன. குறிப்பாக, கடந்த 12 நட்களில் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை தொடர்ந்து விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. சமூகவலைதள பக்கங்கள் மூலம் இந்த மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறன.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வெளியான பதிவுகளை 72 மணிநேரத்திற்குள் சமூகவலைதள நிறுவனங்கள் நீங்க வேண்டும். அவ்வாறு நீக்கவில்லை என்றால் ஐ.டி. சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.